முக்கிய கலந்துரையாடல் : மின்சார சபை ஊழியர்கள் வெளிநடப்பு
மின்சார சபை ஊழியர்களுக்கும், மின்சார சபை பிரதானிகளுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, மின்சார தொழிற்சங்க உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கலந்துரையாடல் இன்று (20) மின்சார சபைத் தலைமையகத்தில் நடைபெற்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் இலங்கை மின்சார சபை மறுசீரமைப்புக்கு பொறுப்பான பணிப்பாளர் பங்கேற்றிருந்தமையினால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து மின்சார தொழிற்சங்க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததாக கூறப்படுகின்றது.
சட்டப் படி வேலை செய்யும் போராட்டம்
குறித்த கலந்துரையாடலில் 25 அமைச்சுக்களின் செயலாளர்களும் மூன்று தொழிற்சங்க பிரதிநிதிகளும் பங்கேற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் மின்சாரத் தொழிலாளர்களின் சட்டப் படி வேலை செய்யும் போராட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை தொடரவுள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேநேரம் எதிர்கால தொழிற்சங்க நடவடிக்கை குறித்து எதிர்வரும் 24 ஆம் திகதி தீர்மானிக்கவுள்ளதாகவும் மின்சார தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
