முல்லைத்தீவில் தனியார் காணியிலிருந்து செல் மீட்பு
Sri Lanka Police
Mullaitivu
Sri Lankan Peoples
By Dhilak
கொக்குளாய் காவல்துறை பிரிவிற்குட்பட்ட புளியமுனை பகுதியிலுள்ள தனியார் காணியிலிருந்து வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு - கொக்குளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியமுனை பகுதியிலுள்ள தனியார் காணி ஒன்றினை உரிமையாளரினால் இன்றையதினம் (21.03.2024) துப்பரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டபோது காணியில் மோட்டார் செல் இருந்துள்ளதை கண்டுள்ளார்.
இதையடுத்து கொக்குளாய் காவல்துறையினருக்கு காணியின் உரிமையாளரினால் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், செல்லினை மீட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தியாக தீபத்திற்கான மெய்யான அஞ்சலி, தமிழர் ஒற்றுமையுடனும் நேர்மையுடனும் இருப்பதாகும்... 23 மணி நேரம் முன்
ஆட்சி மாறியது; அரசியல் கலாசாரம் மாறியதா..!
3 நாட்கள் முன்
மரண அறிவித்தல்