நாவலப்பிட்டி பகுதியில் பெருக்கெடுத்த வெள்ளம் - நீரில் மூழ்கிய அதிகமான வீடுகள்
நாவலப்பிட்டி, பஸ்பாகே கோரளை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பலத்த மழை காரணமாக மகாவலி கங்கை பெருக்கெடுத்துள்ளதால் பல தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
இன்று (20.09.2026) அதிகாலை முதல் பெய்து வரும் கனமழையால், அப்பகுதிகளில் உள்ள பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இதன் காரணமாக 100 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் இடத்தை விட்டு இடம்பெயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மகாவலி கங்கையின் நீர்மட்டம்
குறிப்பாக, நாவலப்பிட்டியின் கித்துல்கோட்டே, லபுவெல்கொட்டுவ மற்றும் ஜயசுந்தரஓவிட்ட ஆகிய பகுதிகளில் உள்ள பல தாழ்நிலப் பகுதிகளும் வீடுகளும் இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளது.

வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களில் சிலர் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்துவரும் கனமழையால் மகாவலி கங்கையின் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கக்கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
வெள்ள நிலைமை தொடர்பில் பிரதேச மக்கள் அவதானமாக இருக்குமாறும், அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |