பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்த ஆளுநர்
மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் சமர்ப்பித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட இந்த பதவி விலகல் கடிதத்திற்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என்று சரத் அபேகோன் தெரிவித்துள்ளார்.
தனிப்பட்ட காரணம்
என்றும், இந்த பதவி விலகலை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டாரா இல்லையா என்பது குறித்து இதுவரை எவ்வித அறிவிப்பும் விடுக்கப்படவில்லை என்றும் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் பேராசிரியர் சரத் அபேகோன் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தான் பதவியிலிருந்து விலகுவதற்கு எடுத்த முடிவு முற்றிலும் தனிப்பட்ட காரணம் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பேராசிரியர் சரத் அபேகோன் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் சில காலம் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |