எரிபொருள் கையிருப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு
fuel
kerosene
storage
By Jaso
இலங்கை பெற்றோலிய சேமிப்பு நிலையங்களில் 12 முதல் 20 நாட்களுக்கு டீசல் மற்றும் பெற்றோல் கையிருப்பு உள்ளதாகவும், தேவைப்பட்டால் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் இறக்குமதி செய்து விநியோகிக்கப்படும் எனவும் இலங்கை பெற்றோலிய மொத்த களஞ்சியசாலை தலைவர் மொஹமட் உவைஸ்(Mohamed Uwais) தெரிவித்துள்ளார்.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் நாளையுடன் மூடப்படும் நிலைமைக்கு கச்சா எண்ணெய் கொள்வனவு செய்வதற்காக இலங்கை சமர்ப்பித்த கேள்வி கோரல்களில் விநியோகஸ்தர்கள் பங்கேற்காமையே காரணம் என உவைஸ் தெரிவித்தார்.
மண்ணெண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டால் இறக்குமதி செய்து மக்களுக்கு விநியோகிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்