தீர்வை எட்டாவிடில் கடலில் இரத்தக்களரி ஏற்படும்- இந்தியா-சிறிலங்கா அரசாங்கங்களுக்கு எச்சரிக்கை!

india attack douglas sri Lanka fisher mans
By Kalaimathy Oct 14, 2021 10:23 AM GMT
Kalaimathy

Kalaimathy

in இலங்கை
Report

இந்திய அரசாங்கம் தமது நாட்டு படகுகளை எமது நாட்டுக்குள் அனுப்பி கொள்ளை அடிப்பதை நிறுத்த வேண்டும். இது ஒரு கேவலமான செயல். இந்திய அரசாங்கம் வல்லரசாக இருந்து கொண்டு ஒரு சிறிய நாட்டுக்குள் வந்து வளங்களை சுரண்ட முயற்சிப்பது மிக வேகமான செயல்.

எனவே இந்தியா இதில் கவனம் எடுத்து செயல்பட வேண்டுமென வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் வி. சுப்ரமணியன் தெரிவித்தார். 

இன்று இந்திய மீன்பிடி படகுகளின் அத்துமீறல் தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த அரசாங்கத்தின் நிகழ்ச்சித்திட்டம் நடவடிக்கைகள், கொள்கை போக்கு இல்லாத காரணத்தினால் பொருளாதார பின்னடைவு ஏற்படுவதுடன் விலைவாசியை உயர்த்தி கொண்டு நாடு பல கோணத்தில் திண்டாடிக் கொண்டிருக்கின்றது.

இந்த சமயத்திலேயே, தொடர்ச்சியாக இலங்கையில் உள்ள மீனவர்கள் அனைவரும் பலதரப்பட்ட வகையிலே பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து சவாலின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.

நீண்டகாலமாகப் புரையோடிப் போயுள்ள அத்துமீறும் இந்திய மீன்பிடி படகுகளின் பிரச்சினைகளுக்கு இன்று வரை பல தரப்பட்ட பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்தும் அதற்கு ஆக்கபூர்வமான முடிவோ தீர்வோ எட்டப்படவில்லை.

இந்த சூழலில் இலங்கை கடற்பரப்பில் இந்திய இழுவைப் படகுகளின் தாக்கம் அதிகரித்து இருக்கின்றது. இந்த அரசாங்கம் வந்த பின்னர் அவர்கள் ஒரு துணிச்சலுடன் நமது கரையை அண்டிய பகுதிகளில் எமது வளங்களை அழிப்பது மட்டுமல்லாமல் தொழிலாளர்களின் தொழில் செய்யும் பொருட்களையும் நாசப்படுத்தி கொண்டிருக்கின்றார்கள்.

அதற்கப்பால் தமிழக மீனவர்களுக்கும் வடபகுதி மீனவர்களுக்கும் இடையில் முரண்பாடான சூழல் ஒன்று ஏற்பட்டு இருக்கின்றது. இது சம்பந்தமாக நாங்கள் இந்திய துணைத் தூதரிடம் சென்று முறைப்பாடுகளை தெரிவித்தோம். அவர்களும் இந்த சந்தர்ப்பத்திலே நடந்த நிகழ்வுக்கு மனவருத்தத்தை தெரிவித்திருக்கிறார்கள்.

இந்திய அரசு இழுவை மடி தொழிலை நிறுத்த காலவகாசம் கேட்டது. அதிலிருந்து யாரும் இதுவரை விடுபட்டதாக தெரியவில்லை. குறிப்பாக வடமராட்சி கிழக்கு பகுதிக்கு அண்மையாக கூப்பிடும் தொலைவில் வந்து இந்திய மீனவர்கள் இழுவை மடி தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.  எமது மீன்பிடி அமைச்சர் இது சம்பந்தமாக ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மக்களை உசுப்பேத்தி விட்டு அமைச்சர் பேசாமல் இருக்கின்றார்.   அரசாங்கத்தை இதிலே அந்நியப்படுத்தி வைத்துக்கொண்டு தொழிலாளர்களுக்கு இடையிலேயே ஒரு முறுகல் நிலையை தொடர்ந்து வைத்திருப்பதற்கு அமைச்சர் முயற்சிக்கிறார். அமைச்சரின் கபட நாடகத்தை விடுத்து அரசாங்கம் உடனடியாக இழுவைமடிச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

வெளிநாட்டிலிருந்து நாட்டுக்குள் அத்துமீறிச் செயற்படுபவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும். அவர்களை எந்த நிபந்தனை அடிப்படையிலோ நல்லிணக்க அடிப்படையிலோ விடுவிக்கக் கூடாது. இந்திய அரசாங்கம் தமது நாட்டு படகுகளை எமது நாட்டுக்குள் அனுப்பி கொள்ளை அடிப்பதை நிறுத்த வேண்டும்.

இது ஒரு கேவலமான செயல். இந்திய அரசாங்கம் வல்லரசாக இருந்து கொண்டு ஒரு சிறிய நாட்டுக்குள் வந்து வளங்களை சுரண்ட முயற்சிப்பது மிக வேகமான செயல். எனவே இந்தியா இதில் கவனம் எடுத்து செயல்பட வேண்டும்.

இரண்டு அரசாங்கங்களும் பேசி இந்த விடயத்தில் உடனடியான தீர்வை எட்ட வேண்டும். இல்லாவிடில் கடலில் ரத்தக்களரி ஏற்படக்கூடிய ஒரு சூழல் ஏற்படும் என்பதை எச்சரிக்கையாக இரண்டு அரசாங்கங்களும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

யார் அழைப்பு விடுத்தாலும் மீனவர்கள் சம்பந்தமான பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்து இணையத் தயாராக இருக்கின்றோம். எனக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டு இருக்கிறது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் உள்ளூரில் இழுவைமடிச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கும் அத்துமீறும் வெளிநாட்டு மீன்பிடி படகுகளை கைது செய்யக்கோரியும் அந்த போராட்டம் நடைபெற உள்ளது.

நானும் அதில் பங்கேற்பேன் இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முயற்சி எடுப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Southend, United Kingdom

12 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சில்லாலை, கனகராயன்குளம், சென்னை, India, திருச்சி, India

19 Sep, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு, அனலைதீவு 6ம் வட்டாரம், Ontario, Canada

20 Aug, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

20 Sep, 2010
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டுவில், Stockholm, Sweden

30 Aug, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், துன்னாலை, வல்வெட்டி, துணுக்காய், கொழும்பு, வவுனியா

20 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
கண்ணீர் அஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025