சாமர சம்பத் தசநாயக்க எம்.பி மீண்டும் நீதிமன்றில் முன்னிலை!
நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க இன்று (13) மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
சிறைச்சாலை அதிகாரிகளால் அவர் இன்று மேல் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
ஊவா மாகாண முதலமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், மாகாண சபைக்குச் சொந்தமான ஆறு நிலையான வைப்புக் கணக்குகளை முதிர்வுத் திகதிக்கு முன்னர் மீளப்பெற்று அரசாங்கத்திற்கு நட்டம் ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மீண்டும் விசாரணை
குறித்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவுள்ள நிலையில் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் அவருக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |