மொட்டு கட்சியுடனான இரகசிய சந்திப்பு! வதந்திகளை நிராகரிக்கும் சம்பிக்க ரணவக்க
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்சவை (Basil Rajapaksa) ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka) ஒருபோதும் சந்திக்கப் போவதில்லை என அந்த கட்சியின் பொதுச் செயலாளர் பந்துல சந்திரசேகர தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்சவுடனான சந்திப்பு தொடர்பில் தொடர்பில் போலியான செய்திகள் வெளியாகி வரும் பின்னணியிலேயே, பந்துல சந்திரசேகர (Bandula Chandrasekera) இதனை தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ச மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று நடைபெறவுள்ளதாக அண்மை நாட்களில் செய்திகள் வெளியாகியிருந்தன.
அதிபர் தேர்தல்
இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில், அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் இந்த சந்திப்பின் போது கலந்துரைாயடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பசில் ராஜபக்ச மற்றும் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று நடைபெறவுள்ளதாக எந்தவொரு அடிப்படையுமற்ற வகையில் போலி செய்திகள் வெளியாகி வருவதாக பந்துல சந்திரசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
பொருளாதார பாதிப்பு
அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட சில அரசியல் கட்சிகளிடம் ஐக்கிய குடியரசு முன்னணி அதன் முன்மொழிவை சமர்ப்பித்துள்ளதாகவும் இது தொடர்பான வெளிப்படையான பேச்சுக்களை முன்னெடுத்திருந்ததாக அவர் கூறியுள்ளார்.
எனினும், மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, தமது கட்சியின் முன்மொழிவு தொடர்பில் இதுவரை எந்தவொரு பதிலையும் வழங்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இலங்கையில் பொருளாதாரத்தை பாதிப்படைய செய்த எந்தவொரு தரப்பினருடனும் ஐக்கிய குடியரசு முன்னணி எந்தவொரு பேச்சுக்களையும் முன்னெடுக்காது என பந்துல சந்திரசேகர உறுதியாக தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |