சொந்த நலனுக்காக செயற்படும் அரசு - இலங்கையர் பலர் நிர்க்கதியில்..
வெளிநாட்டில் நிர்க்கதியான இலங்கையர் பலர் திருப்பி அனுப்பப்படவில்லை என்றாலும் உக்ரேனிய சுற்றுலாப் பயணிகளுகாக நாடு திறக்கப்பட்டுள்ளதால் தற்போதுள்ள தொற்றுநோயை அரசாங்கம் தனது சொந்த நலனுக்கே பயன்படுத்துவதாக ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க குற்றம் சாட்டினார்.
உக்ரேனிய சுற்றுலாப்பயணிகள் குறைந்த கட்டணத்தில் கொண்டுவரப்பட்டாலும் விடுதிகளில் தங்கியிருந்தாலும் இலங்கையர் பலர் நாடு திரும்பக் காத்திருப்பதாகவும் விமானக் கட்டணத்தைப் பொறுத்தவரை அவர்களுக்கு எந்த நிவாரணமும் வழங்கப்படவில்லை என்றும் அவர் பொதுமக்களின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.
இலங்கையில் தனி நபர் வருமானம் உக்ரேனுடன் ஒப்பிடுகையில் அதிகமாகவே உள்ளது. எனவே இந்த சுற்றுலாப்பயணிகளைக் கொண்டுவருவது பொருளாதார முடிவு அல்ல என்றும் அவர் கூறினார்.
மேலும் இலங்கை அரசாங்கம் தனது நாட்டு மக்களுக்கு தடுப்பூசி வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை
ஆனால் அயல் நாடுகளில் தடுப்பூசி உள்ளது என்றும் தொற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் இவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பதை இது காட்டுகிறது என்றும் அவர் கூறினார்.