உலக சமாதானத்துக்கு லண்டனில் சண்டி ஹோமம்! ஈலிங் அம்மன் ஆலயத்தில் நிகழ்வு!
லண்டனில் ஈலிங் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற சைவ ஆலயமான ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத்தில், உலக நன்மை மற்றும் அமைதி வேண்டி சிறப்பு சண்டி ஹோமம் இன்று (ஏப்ரல் 24) மிகச் சிறப்பாக ஆரம்பமாகியுள்ளது.
இந்தச் சண்டி ஹோம நிகழ்வுகள் எதிர்வரும் (03.05.2026) ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளன.
துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் மற்றும் சண்டி ஹோம மந்திர முழக்கங்களுடன் தீவளர்ப்பு நிகழ்வு நடைபெற்று வருகின்றது.
மத்திய கிழக்கில் போர்நெருக்கடி தொடர்வதால் உலகின் அமைதி சீர்குலைந்த நிலையில் உலக சமாதானத்தை வேண்டி இந்த நிகழ்வு நடத்தப்படுவதாக ஆலயம் நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆலயத்துக்கான புதிய நிர்வாக சபை அண்மையில் தெரிவு செய்யப்பட்ட பின்னர், இடம்பெறும் முதலாவது முக்கிய நிகழ்வாக இந்த சண்டி தீவளர்ப்பு நிகழ்வு இருப்பது குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |