கல்வியமைச்சு எடுக்கவுள்ள தீர்மானம் -விரைவில் வரவுள்ள அறிவிப்பு
Ministry of Education
G.C.E. (O/L) Examination
Sri Lankan Schools
By Sumithiran
பாடசாலை விடுமுறை காலத்தை திருத்துவதற்கு கல்வியமைச்சின் அதிகாரிகள் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
2022 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டதை அடுத்தே மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சாதாரண தரப் பரீட்சையில் மாற்றம்
எதிர்வரும் மே 29 ஆம் திகதி தொடங்கும் 2022 சாதாரண தரப் பரீட்சை ஜூன் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்தநிலையில், புதிய பாடசாலை நேர அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் திருத்துவதில் தாமதம்
க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை திருத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 2022 ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி