கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்
corona
sri lanka
people
hemantha herath
By Shalini
வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளதாக சுகாதார சேவை பிரதிப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஹேமந்த ஹேரத் (Hemantha Herath) தெரிவித்தார்.
224 வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 38,420 படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்டிருந்ததாகவும், தற்போது 9,481 படுக்கைகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 94 ஆக குறைந்துள்ளது என்றும் கூறினார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் இன்று (8) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை தெரிவித்துள்ளார்.