புதியவருடத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள மாற்றம் -வெளியானது அறிவிப்பு
newyear
permission
sand
By Sumithiran
நாளை (01) முதல் மணல் அகழ்விற்கு அனுமதி வழங்கும் நடவடிக்கையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இதன்படி மண், மணல் மற்றும் கல் ஆகியவற்றை அகழ்வதற்கும் கொண்டு செல்வதற்கும் அனுமதி வழங்கும் நடவடிக்கைகள் ஒரே நிறுவனத்தால் முன்னெடுக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்திற்கு வருகைதந்து, சம்பந்தப்பட்ட ஆவணங்களை சமர்ப்பித்து அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள முடியுமென அதன் தலைவர் அனுர வல்பொல தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியிலுள்ள புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகத்தின் கிளை அலுவலகங்களில் இந்த சேவையை பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி