யாழில் மனிதப் புதைகுழி அமைந்துள்ள பகுதிகளில் மாற்றங்கள் : வெளியான அதிர்ச்சி தகவல்!

Jaffna Gajendrakumar Ponnambalam Selvarajah Kajendren
By Jaso Feb 15, 2025 07:17 PM GMT
Report

யாழ்ப்பாணம்(jaffna) அரியாலையில் அமைந்துள்ள சித்துப்பத்தி இந்து மயானத்தில் மனிதப் பற்கள் , எலும்புகள், மண்டையோடு போன்ற மனித எச்சங்கள் காணப்படுகின்றன. அந்த மயானத்தை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்(kajendrakumar ponnampalm), அக் கட்சியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன்(selvarajah kajendren), ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் ஆகியோர் இன்றையதினம்(15) பார்வையிட்டனர்.

அதன்பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

கிடங்கு தோண்டியபோது வெளிவந்த எலும்புகள்

தகனமேடை ஒன்றினை அமைப்பதற்காக நல்லூர் பிரதேச சபையினர் மயானத்தின் மேற்கு பக்கமாக கிடங்கு தோண்டியபோது மனித எலும்புகள் மீட்கப்பட்டன. இருப்பினும் நல்லூர் பிரதேச சபையோ அல்லது குறித்த வேலைத் திட்டத்தினை மேற்கொண்டவர்களோ இதுவரை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யவில்லை. இந்நிலையில் எமது கட்சியின் உறுப்பினரான கிருபா, இந்த மயானத்தின் நிர்வாகத்தில் ஒரு உறுப்பினராகவும் காணப்படுகின்றார். அந்த வகையில் இச்சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யுமாறு அவருக்கு நாங்கள் தெரிவித்துள்ளோம்.

யாழில் மனிதப் புதைகுழி அமைந்துள்ள பகுதிகளில் மாற்றங்கள் : வெளியான அதிர்ச்சி தகவல்! | Changes In Areas Where Human Graves In Jaffna

பிரதேசமானது அண்ணளவாக 600 தமிழ் பொதுமக்கள் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட இடமாக சொல்லப்படுகின்றது. கிருசாந்தி படுகொலை வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பு வழங்கப்பட்ட நபர் தெரிவித்த தகவலில் இந்த செம்மணி சம்பவங்கள் அம்பலமாகின.

அந்த வகையில் அவர் 10 இடங்களை கூறிய நிலையில் அவற்றில் இரண்டு இடங்களில் மாத்திரமே தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. ஏனைய இடங்களில் கணிசமான அளவு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக சந்தேகிக்க தோன்றுகின்றது.

சிறீதரனை கைது செய்ய வலியுறுத்து! பூதாகரமாகும் தையிட்டி விகாரை விவகாரம்

சிறீதரனை கைது செய்ய வலியுறுத்து! பூதாகரமாகும் தையிட்டி விகாரை விவகாரம்

2011 ஆம் ஆண்டு காலப்பகுதி வரை இராணுவத்தின் முகாம் 

இந்த மயானத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு காலப்பகுதி வரை இராணுவத்தின் முகாம் அமைக்கப்பட்டு காணப்பட்டது. அங்கு இறந்தவர்கள் புதைக்கப்பட்டதாக கூறப்பட்டால் தற்போது உள்ள தகனமேடைக்கு கிழக்கு புறமாக தான் புதைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

யாழில் மனிதப் புதைகுழி அமைந்துள்ள பகுதிகளில் மாற்றங்கள் : வெளியான அதிர்ச்சி தகவல்! | Changes In Areas Where Human Graves In Jaffna

1970 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து பேணப்பட்டு வந்த ஆவணங்களில் இருந்து பெறப்பட்ட உத்தியோகபூர்வ தகவல்களின் அடிப்படையில் இந்த மயானத்தில் தற்போது புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ள பகுதியில் எவரும் புதைக்கப்படவில்லை.

ஆகவே இந்த மனிதப் புதைகுழி குறித்து தீவிரமாக ஆராய்வது முக்கியமான ஒன்றாகும். செம்மணி படுகொலைகளின் தகவல்கள் அம்பலமாகிய நிலையில் அது தொடர்பான விசாரணைகள் முடிவுறாத நிலையில் தான் இந்த புதைகுழியானது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றார்.   


கடற்றொழிலாளர்களுக்கு தொடர் பாதிப்பு: வர்ணகுலசிங்கம் விசனம்

கடற்றொழிலாளர்களுக்கு தொடர் பாதிப்பு: வர்ணகுலசிங்கம் விசனம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், உக்குளாங்குளம்

18 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024