இலங்கையின் கற்றல், கற்பித்தல் முறைகளில் மாற்றங்கள் அவசியம் : உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டு
இலங்கையின் கற்றல் மற்றும் கற்பித்தல் உள்ளிட்ட இரு முறைகளிலும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் வலியுறுத்தியுள்ளார்.
தென்னிலங்கை ஊடகமென்றுக்கு வழங்கிய செவ்வியில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர், 2024 ஆம் ஆண்டில் கல்விக்காக 255 பில்லியன் ரூபாவையும் உயர் கல்விக்காக மேலும் 210 பில்லியன் ரூபாவையும் ஒதுக்கீடு செய்ய வேண்டுமென்ற யோசனை முன்வைக்கப்படிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
நிர்வாகச் செயற்பாடு
மேலும் கருத்து தெரிவித்த அவர், இலங்கையில் அடுத்த வருட இறுதிக்குள், அனைத்து பல்கலைக்கழகங்களினதும் உப வேந்தர்களுக்கு மேலதிகமாக, பிரதி உபவேந்தர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

அத்துடன், இலங்கையில் முதன்முறையாக நுண்கலை, மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் பாடங்கள் தொடர்பிலான பகுப்பாய்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது, இதனூடாக இந்த வருட இறுதிக்குள் உரிய இலக்குகளை அடைய எதிர்பார்த்துள்ளோம்.
உயர் கல்விக்கான தேசிய ஆணைக்குழு அல்லது அதிகார சபையொன்றை உருவாக்க எதிர்பார்த்துள்ளேன்.
இதனூடாக பல்வேறு பகுதிகளில் முடங்கிக் கிடக்கும் நிர்வாகச் செயற்பாடுகளை ஒரு இடத்திலிருந்து செயற்படுத்த முடியும்.
நேரடியான புலைமைப்பரிசில்
பிரஜைகளை வலுவூட்டும் வகையில் 2025 ஆம் ஆண்டிலிருந்து அரச பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பைப் பெறும் மாணவர்களுக்கு அரசாங்கம் முதலீடு செய்யும் முழுத் தொகையையும் நேரடியாக புலைமைப்பரிசில் அடிப்படையில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது” - என்றார்.
சித்திரவதையின் காயங்கள் உடலில் மாத்திரம் தெரிவதல்ல… 19 நிமிடங்கள் முன்