பேராசிரியர் ரவீந்திரநாத் கொலையை நேரில் கண்ட சாட்சியம்! பிள்ளையானுக்கு எதிராக தயாராகும் குற்றப்பத்திரிகை

Pillayan Sivanesathurai Santhirakanthan Law and Order
By Dharu Jun 05, 2026 08:23 AM GMT
Report

கிழக்கு பல்கலைக்கழகப் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் பிள்ளையானால் நடத்திவரப்பட்ட முகாமில் வைத்து கொல்லப்பட்டார் என்பதற்கான நேரில் கண்ட சாட்சியங்களும், கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் அளித்த இரகசிய வாக்குமூலங்கள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களம் வெளிப்படுத்தியுள்ளது.

இதன்படி  பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அல்லது பிள்ளையானுக்கு எதிராக குற்றப்பத்திரிகை ஒன்று தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக சட்டமா அதிபர் திணைக்களம் உச்ச நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

இது குறித்து தெரியவருகையில்,

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு : உயர் நீதிமன்றின் உத்தரவு

பிள்ளையானின் அடிப்படை உரிமை மனு : உயர் நீதிமன்றின் உத்தரவு

பேராசிரியர் காணாமல் போன சம்பவம்

தனது கைது மற்றும் தடுப்புக்காவல் சட்டவிரோதமானது எனத் தெரிவித்து பிள்ளையானால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு அண்மையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சுஹர்ஷி ஹேரத் இந்த விடயங்களை வெளிப்படுத்தினார்.

பேராசிரியர் ரவீந்திரநாத் கொலையை நேரில் கண்ட சாட்சியம்! பிள்ளையானுக்கு எதிராக தயாராகும் குற்றப்பத்திரிகை | Charge Sheet Being Prepared Against Pillaiyan

மகிந்த சமரவர்தன, அர்ஜுன ஒபேசேகர மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோரைக் கொண்ட மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

அங்கு சட்டத்தரணி உதய கம்மன்பிலவுடன் மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைத்து, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தனது கட்சிக்காரரைக் கைது செய்தபோது அதற்கான காரணங்களை விளக்காததன் மூலம் அவரது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

சுமார் பத்தொன்பது ஆண்டுகளுக்கு முன்னர் கிழக்கு பல்கலைக்கழகப் பேராசிரியர் காணாமல் போன சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவரைக் கைது செய்ய சட்ட ஏற்பாடுகள் இல்லை என்றும் அவர் வாதிட்டுள்ளார்.

மேலும், பாதுகாப்பு அமைச்சராக ஜனாதிபதியிடமிருந்து தடுப்புக் காவல் உத்தரவுகளைப் பெறும் போது குற்றப் புலனாய்வுத் திணைக்களம் திருப்திகரமான போதுமான காரணங்களை முன்வைக்காததால் அந்த செயல்முறை முற்றிலும் சட்டத்திற்கு முரணானது என்றும் ஜனாதிபதி சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

அந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல், கைது செய்யப்பட்டபோதும், வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டபோதும் உரிய காரணங்கள் மனுதாரருக்கு வாய்மொழியாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

சிறையில் பிள்ளையானின் அறைக்கு அடுத்த அறையில் நடந்த சம்பவம்!

சிறையில் பிள்ளையானின் அறைக்கு அடுத்த அறையில் நடந்த சம்பவம்!

வெளிவந்துள்ள வலுவான விடயங்கள்

பொலன்னறுவை செவனபிட்டிய பிரதேசத்தில் சட்டவிரோத முகாம் ஒன்றை நடத்தி எதிர்ப்பாளர்களுக்கும் பல்வேறு நபர்களுக்கும் சித்திரவதை செய்தமை தொடர்பில் மனுதாரருக்கு எதிராக வலுவான விடயங்கள் விசாரணைகள் மூலம் வெளிவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

பேராசிரியர் ரவீந்திரநாத் கொலையை நேரில் கண்ட சாட்சியம்! பிள்ளையானுக்கு எதிராக தயாராகும் குற்றப்பத்திரிகை | Charge Sheet Being Prepared Against Pillaiyan

கிழக்கு பல்கலைக்கழகப் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் அந்த முகாமில் வைத்து கொல்லப்பட்டார் என்பதற்கான நேரில் கண்ட சாட்சியங்களும், கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்கள் அளித்த இரகசிய வாக்குமூலங்களும் இருப்பதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

எனவே, விசாரணைகளில் வெளிவந்த தகவல்களின் அடிப்படையில் சட்டபூர்வமாக தடுப்புக் காவல் உத்தரவுகள் பெறப்பட்டுள்ளதாகவும், அதற்காக வாக்குமூலங்களின் பிரதிகளை ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்று சட்டம் இல்லை என்றும் அவர் மேலும் உறுதிப்படுத்தினார்.

இரு தரப்பினரின் சமர்ப்பிப்புகளையும் பரிசீலித்த மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதியரசர்கள் குழாம், சம்பந்தப்பட்ட சாட்சியாளர்களின் வாக்குமூலங்களின் பிரதிகளை இரகசிய உறையில் இட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பிரதி சொலிசிட்டர் ஜெனரலுக்கு உத்தரவிட்டது.

அத்துடன், வழக்கு தொடர்பான எழுத்துமூல சமர்ப்பிப்புகள் இருந்தால், அவற்றை ஜூன் மாதம் 22ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு தரப்பினர்களுக்கு அறிவித்த நீதிபதிகள் குழாம், மனு தொடர்பான தீர்ப்பை அறிவிப்பதை ஒத்திவைக்கவும் தீர்மானித்தது.  

தொடர்புடைய செய்திகள் 

பிள்ளையானின் வதைமுகாமில் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட பேராசிரியர் ரவீந்திரநாத்! CID விசாரணையில் அம்பலம்

பிள்ளையானின் வதைமுகாமில் கொலை செய்யப்பட்டு எரிக்கப்பட்ட பேராசிரியர் ரவீந்திரநாத்! CID விசாரணையில் அம்பலம்

பிள்ளையானை சிறையில் இரகசியமாக சந்தித்த இரு பெண்கள்! CID அறிக்கையில் வெளிவரும் மர்மங்கள்

பிள்ளையானை சிறையில் இரகசியமாக சந்தித்த இரு பெண்கள்! CID அறிக்கையில் வெளிவரும் மர்மங்கள்

சுரேஷ் சாலே கைது! பிள்ளையான் கொடுத்த வாக்குமூலத்தால் நாமலுக்கு இறுகும் பிடி

சுரேஷ் சாலே கைது! பிள்ளையான் கொடுத்த வாக்குமூலத்தால் நாமலுக்கு இறுகும் பிடி

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னரே அறிந்திருந்த பிள்ளையான் : அம்பலப்படுத்திய அமைச்சர்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை முன்னரே அறிந்திருந்த பிள்ளையான் : அம்பலப்படுத்திய அமைச்சர்

சிறையில் இருந்து பிள்ளையான் அனுப்பிய கடிதம் - மாநகர சபை முதல்வரிடம் சிஜடி விசாரணை

சிறையில் இருந்து பிள்ளையான் அனுப்பிய கடிதம் - மாநகர சபை முதல்வரிடம் சிஜடி விசாரணை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்

யாழ். அத்தியடி, Adelaide, Australia, Melbourne, Australia

04 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, வடலியடைப்பு, நல்லூர், கொழும்பு

05 Jun, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் மேற்கு

07 May, 2026
மரண அறிவித்தல்

பொலிகண்டி, Markham, Canada

01 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை ஊரிக்காடு, Scarborough, Canada

04 Jun, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை வீமன்காமம், Catford, United Kingdom

05 Jun, 2011
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, முரசுமோட்டை, Noisy-le-Grand, France, உதயநகர்

05 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Brugg, Switzerland

08 May, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Toronto, Canada

01 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

05 Jun, 2025
மரண அறிவித்தல்

அல்வாய், Colchester, United Kingdom

29 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
அகாலமரணம்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, வாணக்குடியிருப்பு, தம்பசிட்டி, கொழும்பு, London, United Kingdom

28 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொட்டாஞ்சேனை

03 Jun, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

03 Jun, 2015
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015