டயானாவின் மரணத்தால் பேரானந்தத்தில் திளைத்த சார்லஸ்! அதிர்ச்சியூட்டும் ஸ்பென்சரின் குறிப்புகள்
டயானா உயிரிழந்த சில நாட்களுக்குப் பின்னர் மன்னர் சார்லஸ் தன்னிடம் “நாம் அவரை விரைவில் மறந்துவிடுவோம்” என்று கூறியதாக மறைந்த இளவரசி டயானாவின் சகோதரர் சார்லஸ் ஸ்பென்சர், தனது நினைவுக் குறிப்புகளில் கூறிய விடயங்கள் பிரித்தானியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் பேசுபொருளாகியுள்ளது.
இங்கிலாந்தின் நாளிதழ் ஒன்றில் புதன்கிழமை வெளியான நூல் பகுதியை மேற்கோள்காட்டியே இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.
அப்போது வேல்ஸ் இளவரசராக இருந்த சார்லஸ், டயானாவின் இறுதி ஊர்வலத்தில் தனது மகன்களான வில்லியம் மற்றும் ஹாரி பங்கேற்கக் கூடாது என தான் கருதியதாக ஸ்பென்சர் கூறியுள்ளார்.
கோபத்தின் வெளிப்பாடு
இது தொடர்பாக தொலைபேசியில் பேசியபோது சார்லஸ் கோபத்தின் வெளிப்பாடாக தொடர்ந்து பேசினார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், டயானா உயிரிழந்த இரவில் சார்லஸ் தன்னிடம் பேசியபோது, லாட்டரி வென்றவர் போல மிகுந்த உற்சாகத்துடன் அவரது குரல் ஒலித்ததாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வேல்ஸ் இளவரசியான டயானா, 1997 ஆகஸ்ட் மாதம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அதிவேகமாக சென்ற கார் விபத்தில் சிக்கி, உட்புற காயங்களுக்கு உள்ளாகி உயிரிழந்தார்.
அப்போது அவருடைய மகன்களான வில்லியம் மற்றும் ஹரிக்கு முறையே 15 மற்றும் 12 வயது.
ஸ்பென்சரின் குற்றச்சாட்டு
டயானாவின் இறுதிச்சடங்கிற்கு சில நாட்களுக்குப் பின்னர் நடைபெற்ற இறுதி ஊர்வலத்தில் இருவரும் பங்கேற்றனர்.

இந்நிலையில் ஸ்பென்சரின் குற்றச்சாட்டுகளுக்கு பக்கிங்ஹாம் அரண்மனை புதன்கிழமை கடும் எதிர்வினை ஆற்றியுள்ளது.
“புத்தகங்கள் தொடர்பாக பொதுவாக கருத்து தெரிவிப்பது எங்கள் நடைமுறை அல்ல. இருப்பினும், சகோதரரை இழந்த துயரம் ஒருவரின் சிந்தனையை மங்கச் செய்யலாம். தீர்மானிக்கும் திறனை பாதிக்கலாம்.
மேலும் பல ஆண்டுகளுக்குப் பின்னரும் நினைவுகளை பிறர் உணராத வகையில் மாற்றியமைக்கலாம் என்பதை மன்னர் சார்லஸ் கவனத்தில் கொண்டுள்ளார்” என்று அரண்மனை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |