குடிபுகு சான்றிதழ் முறைமை: ஆளுநருக்கு பகிரங்க சவால் விடுத்த சாவகச்சேரி நகரசபை உறுப்பினர்

Sri Lankan Tamils Tamils Sri Lanka
By Theepan Aug 19, 2026 11:53 PM GMT
Report

குடிபுகு சான்றிதழ் முறைமையை நடைமுறைப்படுத்தினால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு பாரிய வருமான இழப்பு ஏற்படும் எனவும் ஆளுநர் தவறாக வழிநடத்தப்படுகின்றார் எனவும் பதவி வறிதாக்கப்பட்ட சாவகச்சேரி நகரசபையின் உப தவிசாளரும் உறுப்பினருமான ஞானப்பிரகாசம் கிஷோர் தெரிவித்துள்ளார்.

சாவகச்சேரி நகரசபை தொடர்பான வழக்கில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் தீர்ப்பு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிராக மேன்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

ஈரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை...! ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

ஈரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை...! ட்ரம்ப் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றங்கள்

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், மக்கள் நேரடியாக அணுகக்கூடிய நிர்வாக அமைப்பாக உள்ளூராட்சி மன்றங்களே காணப்படுகின்றன என்றும் வர்த்தகர்கள் உள்ளிட்ட பொதுமக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தமது பொறுப்பு என்றும் தெரிவித்துள்ளார்.

குடிபுகு சான்றிதழ் முறைமை: ஆளுநருக்கு பகிரங்க சவால் விடுத்த சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் | Chavakachcheri Uc Ex Vc Criticizes Governor

குடிபுகு சான்றிதழ் முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டால் உள்ளூராட்சி மன்றங்களுக்கு கணிசமான வருமான இழப்பு ஏற்படும் எனவும் இந்த விடயத்தை வடமாகாண ஆளுநர் புரிந்து கொள்ளாமல் தவறாக வழிநடத்தப்படுகின்றார் எனவும் கிஷோர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அத்துடன், அரச கட்டிடங்களுக்கும் குடிபுகு சான்றிதழ் அவசியம் என ஆளுநர் கூறுகின்ற நிலையில், பழைய பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள வடமாகாண ஆளுநர் செயலகம் மற்றும் அங்குள்ள கட்டிடங்களுக்கு உரிய கட்டிட அனுமதிகளும் குடிபுகு சான்றிதழ்களும் உள்ளனவா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ஆடை விவகாரம்: இனவாதக் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை ஆடை விவகாரம்: இனவாதக் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி

கட்டிட அனுமதிகள்

ஆளுநர் செயலகத்திற்கான கட்டிட அனுமதிகளையும் குடிபுகு சான்றிதழையும் வடமாகாண மக்களுக்கு பகிரங்கப்படுத்த தயாரா என அவர் சவால் விடுத்துள்ளார்.

குடிபுகு சான்றிதழ் முறைமை: ஆளுநருக்கு பகிரங்க சவால் விடுத்த சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் | Chavakachcheri Uc Ex Vc Criticizes Governor

மேலும், யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம் உள்ளிட்ட நீண்டகாலத்திற்கு முன்னர் அமைக்கப்பட்ட அரச கட்டிடங்களுக்கும் குடிபுகு சான்றிதழ் உள்ளதா என கேள்வி எழுப்பிய கிஷோர், 2016ஆம் ஆண்டுக்குப் பின்னரே வடமாகாணத்தில் குடிபுகு சான்றிதழ் தொடர்பான நடைமுறை முக்கியத்துவம் பெற்றதாகத் தெரிவித்துள்ளார்.

2010 ஆம் ஆண்டுக்கு முன்னர் சாவகச்சேரி நகரசபை எல்லைக்குள் கட்டப்பட்ட பல பாரிய கட்டிடங்களுக்கு கட்டிட அனுமதியோ குடிபுகு சான்றிதழோ இல்லாத நிலையில் அவை கட்டப்பட்ட காலத்தில் இத்தகைய நடைமுறை நடைமுறையில் இருக்கவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம்...! முற்றுகையிட்ட காவல்துறையினர்

வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம்...! முற்றுகையிட்ட காவல்துறையினர்

சாவகச்சேரி நகரசபை 

தமது பதவி பறிக்கப்பட்டமை தனிப்பட்ட விடயம் அல்ல என்றும் வடமாகாணத்தில் உள்ள அனைத்து உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் உரிமைகளையும் குரலையும் பாதுகாப்பதற்கான போராட்டம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குடிபுகு சான்றிதழ் முறைமை: ஆளுநருக்கு பகிரங்க சவால் விடுத்த சாவகச்சேரி நகரசபை உறுப்பினர் | Chavakachcheri Uc Ex Vc Criticizes Governor

பதவிகள் வரலாம் போகலாம் ஆனால் மக்களோடும் இந்த மண்ணோடும் நாங்கள் தொடர்ந்து நிற்போம் எனவும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் குரலை நசுக்கும் எந்த நடவடிக்கைக்கும் நாங்கள் அஞ்சப்போவதில்லை எனவும் கிஷோர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சாவகச்சேரி நகரசபை தொடர்பான யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இம்ரான் கானுக்கு தனியார் வைத்தியசாலை சிகிச்சை...! நீதிமன்றை நாடியது பாகிஸ்தான் அரசு

இம்ரான் கானுக்கு தனியார் வைத்தியசாலை சிகிச்சை...! நீதிமன்றை நாடியது பாகிஸ்தான் அரசு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022