இம்ரான் கானுக்கு தனியார் வைத்தியசாலை சிகிச்சை...! நீதிமன்றை நாடியது பாகிஸ்தான் அரசு
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை மருத்துவ சிகிச்சைக்காகத் தனியார் வைத்தியசாலையொன்றுக்கு மாற்றுமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அரசாங்கம் இந்த பரிசீலனை மனுவை தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிறை நடைமுறைகள்
ராவல்பிண்டியின் அடியாலா சிறையிலுள்ள இம்ரான் கானை இஸ்லாமாபாத்திலுள்ள ஷிஃபா சர்வதேச வைத்தியசாலைக்கு இரண்டு நாட்களுக்குள் மாற்றுமாறும், ஐந்து நிபுணர்கள் அடங்கிய மருத்துவக் குழுவை அமைத்து அவருக்குச் சிகிச்சை அளிக்குமாறும் உச்ச நீதிமன்றம் அரசாங்கத்திற்கு உத்தரவிட்டிருந்தது.

எனினும், சிறை நடைமுறைகளின்படி தண்டனை பெற்ற கைதியொருவருக்கு அரசாங்கப் பொது வைத்தியசாலையிலேயே சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும், சிறை அதிகாரிகளின் கருத்துக்களைக் கேட்காமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டி அரசாங்கம் இந்த பரிசீலனை மனுவைத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |