ஜனாதிபதியிடம் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள அவசர கோரிக்கை...!

Anura Dissanayake Douglas Devananda Sri Lanka
By Theepan Oct 05, 2026 04:32 PM GMT
Report

காங்கேசன்துறை பகுதியில் அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ள 187.56 ஏக்கர் காணியில் சிமெந்து பொதியிடல், உற்பத்தி மற்றும் விநியோகக் கைத்தொழிலை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

காங்கேசன்துறை முதலீட்டு வலயத்திற்காக மொத்தம் 351.23 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக முதற்கட்டமாக 187.56 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறையில் தாக்கப்பட்ட அனோஜன்! பாதுகாப்பு குறித்த அச்சத்தில் உறவினர்கள்

சிறையில் தாக்கப்பட்ட அனோஜன்! பாதுகாப்பு குறித்த அச்சத்தில் உறவினர்கள்

விடுவிக்கப்பட்டுள்ள காணி

இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “விடுவிக்கப்பட்டுள்ள காணிப் பகுதியில் சிமெந்து பொதியிடல் மற்றும் விநியோகம் தொடர்பான கைத்தொழிலை முன்னெடுப்பதே தமது திட்டமாகும்.

குறித்த பகுதியில் இருந்து எவ்வித மூலப்பொருட்களையும் அகழ்ந்தெடுக்காமல், இந்தியாவில் இருந்து சிமெந்து உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களை இறக்குமதி செய்து அவற்றை கலந்து சிமெந்து தயாரித்து அங்கிருந்தே விநியோகம் செய்ய முடியும்.

Gallery

இதற்கான முதலீட்டை மேற்கொள்ள ஏற்கனவே முதலீட்டாளர் ஒருவர் தயாராக இருப்பதுடன் குறித்த முதலீட்டாளரின் திட்ட மதிப்பீடு ஏற்கனவே முதலீட்டு ஊக்குவிப்புச் சபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

அத்திட்ட மதிப்பீடு மீண்டும் கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

காங்கேசன்துறை பகுதியில் முன்மொழியப்படும் இத்திட்டம் மூலம் குறைந்தபட்சம் 1,000 பேருக்காவது நேரடி மற்றும் மறைமுக தொழில்வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய வகையில் திட்டத்தை முன்னெடுக்க ஜனாதிபதி அவதானம் செலுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி வழங்கும் ஒத்துழைப்பை தாம் பெரிதும் மதிப்பதாகவும் டக்ளஸ் தேவானந்தா தனது கடிதத்தில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முல்லைத்தீவில் மாணவர்களைப் பேருந்தில் ஏற்ற மறுத்த இ.போ.ச. சாரதி..! கிளம்பியுள்ள எதிர்ப்பு

முல்லைத்தீவில் மாணவர்களைப் பேருந்தில் ஏற்ற மறுத்த இ.போ.ச. சாரதி..! கிளம்பியுள்ள எதிர்ப்பு

 

பிரான்ஸில் தீக்கிரையான 24 பாடசாலைகள்

பிரான்ஸில் தீக்கிரையான 24 பாடசாலைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022