வடக்கு கடற்பரப்பில் கரை ஒதுங்கும் இரசாயன கழிவுப்பொருட்கள் : அகற்ற துரித ஏற்பாடுகள்
வடபகுதி கடற்பரப்பில் இரசாயன கழிவுப்பொருட்கள் கரை ஒதுங்கி வருகின்றன கரைஒதுங்குகின்ற மேற்படி இரசாயன கழிவு பொருட்களை சேகரித்து அப்புறப்படுத்துவதற்கு தற்போது ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது
இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஒன்று வலிகாமம் மேற்கு பிரதேச செயலகத்தில் இன்று திங்கட்கிழமை( 23/02/2026) இடம்பெற்றது
கேரளா கடற்கரையில் இடம்பெற்ற விபத்து
கடந்த ஆண்டு மே மாதத்தில் கேரளா கடற்கரையில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் இரசாயன பொருட்களை ஏற்றிய MSC Elsha - 3 என்ற சரக்கு கப்பல் கடலில் கவிழ்ந்தது.

அந்த விபத்து காரணமாக கடலில் ஏற்பட்ட மிகப்பெரிய மாசடைதல் காரணமாக குறித்த இரசாயன பொருட்கள் தற்போது இலங்கையின் வடக்கின் கரையோரப்பகதிகளில் கரையொதுங்கிவருகிறது
கரையோரத்தை துப்பரவு செய்வதற்கு துரித ஏற்பாடுகள்
இவ்வாறான பொருட்களை சேகரித்து கரையோரத்தை துப்பரவு செய்வதற்கு தற்போது துரித ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

கடல் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை அதிகாரிகள் தற்போது களநிலையில் செயற்பட்டுவருகின்றனர் இந்த நடவடிக்கை மாதக்கணக்கில் நீண்டு செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டது
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |