அதிகரிக்கும் வாகன விலைகள்! வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சித் தகவல்

Government Of Sri Lanka Sri Lankan Peoples vehicle imports sri lanka
By Dhilak May 16, 2026 08:49 AM GMT
Report

வாகன இறக்குமதிக்காக அரசாங்கத்தினால் புதிதாக விதிக்கப்பட்டுள்ள 50% கூடுதல் வரி காரணமாக, வாகனங்களின் விலைகள் குறைந்தது 1.5 மில்லியன் ரூபாவினால் அதிகரிக்கும் என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் (VIASL) எச்சரித்துள்ளது.

இதனால் நுகர்வோரால் வாகனங்களை கொள்வனவு செய்ய முடியாத நிலைமை மேலும் மோசமடையும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ள இந்த கூடுதல் கட்டணமானது, ஏற்கனவே நடைமுறையில் உள்ள சுங்க வரிகள் மற்றும் அண்மைய வெளிநாட்டு நாணய மாற்று விகித உயர்வுகளுக்கு மேலதிகமாக விதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் ஊடகப்பேச்சாளர் அரோஷ ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு : அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

ஆசிரியர்களின் சம்பள அதிகரிப்பு : அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

குறைந்தபட்சம் 1.5 மில்லியன் ரூபா 

"எவராலும் தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு வாகனங்களின் விலைகள் உயர்ந்து வருகின்றன. இதற்கு மேல் விதிக்கப்பட்டுள்ள புதிய கூடுதல் கட்டணத்தை வாகன இறக்குமதியாளர்களால் தாங்க முடியாது.

அதிகரிக்கும் வாகன விலைகள்! வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சித் தகவல் | Due To New Taxes Vehicle Prices Increase

இதனால் பல வாகனங்களின் விலைகள் 1.5 மில்லியன் முதல் 2.5 மில்லியன் ரூபா வரை அதிகரிக்கும்" என அவர் கூறியுள்ளார்.

தனிப்பட்ட முறையில் இறக்குமதி செய்யப்படும் அல்லது விற்பனை நிலையங்கள் ஊடாக விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு வாகனத்திற்கான சுங்க வரியும் இந்த கூடுதல் கட்டணம் காரணமாக அதிகரிக்கும் என விளக்கிய அவர், "நிச்சயமாக, வாகனங்களின் விலையில் குறைந்தபட்சம் 1.5 மில்லியன் ரூபா உயர்வு ஏற்படும். ஆனால் இது வாகனத்திற்கு வாகனம் மாறுபடும்" என சுட்டிக்காட்டியுள்ளார்.

வாகனங்களின் விலை

இருப்பினும், மே 15ஆம் திகதிக்கு முன்னர் கடன் கடிதங்களை திறந்தவர்களுக்கு இந்த கூடுதல் கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்றும், ஆனாலும் அமெரிக்க டொலர் மற்றும் ஜப்பானிய யென் ஆகியவற்றின் மதிப்பு உயர்வு காரணமாக அவர்கள் அதிக செலவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதிகரிக்கும் வாகன விலைகள்! வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சித் தகவல் | Due To New Taxes Vehicle Prices Increase

இந்த புதிய கூடுதல் கட்டணம், நாணய மதிப்பு ஏற்ற இறக்கங்கள் மற்றும் அண்மையில் சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி (SSCL) 2.5% ஆக உயர்த்தப்பட்டமை ஆகியவற்றின் கூட்டுத் தாக்கம் காரணமாக, சந்தையில் வாகனங்களின் விலைகள் பாரியளவில் அதிகரிக்கும் என இலங்கை வாகன வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

நாட்டை விட்டு வெளியேறும் ஆயிரக்கணக்கான வைத்தியர்கள்!

நாட்டை விட்டு வெளியேறும் ஆயிரக்கணக்கான வைத்தியர்கள்!

வடக்கில் இடமாற்ற விதிகளுக்கு முரணாக பணியாற்றும் கல்வி அதிகாரிகள் - அம்பலமான உண்மை

வடக்கில் இடமாற்ற விதிகளுக்கு முரணாக பணியாற்றும் கல்வி அதிகாரிகள் - அம்பலமான உண்மை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026