சிங்கப்பூர் சென்ற ஷிராந்திக்கு இறுதி அறிவிப்பு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவுக்கு மற்றுமொரு அழைப்பாணை அனுப்ப காவல்துறை நிதி மோசடிக் குற்றத்தடுப்பு பிரிவு தீர்மானித்துள்ளது.
அதன் பிரகாரம் எதிர்வரும் வாரத்துக்குள் காவல்துறை நிதிமோசடிக் குற்றத் தடுப்புப் பிரிவில் முன்னிலையாகுமாறு ஷிரந்திக்கு நினைவூட்டல் அழைப்புக் கடிதம் அனுப்பப்படவுள்ளது.
தற்போதைக்கு மகிந்த ராஜபக்ச வசிக்கும் தங்காலை வீட்டுக்கும் நுகேகொடையில் உள்ள மஹிந்தவின் தனிப்பட்ட இல்லத்துக்கும் குறித்த கடிதத்தின் பிரதிகள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
காவல்துறையினர் தீர்மானிம்
அதில் குறிப்பிடப்படும் தினத்தில் விசாரணைகளுக்கு ஷிரந்தி ராஜபக்ச முன்னிலையாகாத பட்சத்தில் அவருக்கு எதிராக வெளிநாட்டுப் பயணத் தடை உத்தரவொன்றைப் பெற்றுக் கொள்ளவும் காவல்துறை எதிர்பார்த்துள்ளனர்.

அதன் மூலம் ஷிரந்தி வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பும் சந்தர்ப்பத்தில் விமான நிலையத்தில் வைத்தே அவரைக் கைது செய்யவும் காவல்துறையினர் தீர்மானித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |