பால் போத்தலுடன் குழந்தையின் எச்சம் : மூன்றாவது பெரிய மனித புதைகுழியாக மாறியது செம்மணி

Jaffna Sri Lanka chemmani mass graves jaffna
By Raghav Jul 24, 2025 03:24 AM GMT
Report

செம்மணி புதைக்குழியிலிருந்து குழந்தையின் எலும்பு கூட்டு தொகுதிகள், ஒரு பால் போச்சியை ஒத்த போத்தல் ஒன்றும் (குழந்தைகள் பால் அருந்தும் போத்தல்) ஆடைகளை ஒத்த துணிகள் என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன.

நான்கு அல்லது ஐந்து வயது மதிக்கத்தக்க பிள்ளைகளின் எலும்புக்கூடுகள் உட்பட புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் அடிப்படையில் நாட்டின் மூன்றாவது பெரிய புதைகுழியாக செம்மணி பதிவாகியுள்ளது.

2025 மே மாத நடுப்பகுதியில் இருந்து செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வில் இதுவரை 85 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அவற்றில் சிறுவர்களின் எச்சங்களும் காணப்படுகின்றன. 

முன்னர் அடையாளம் காணப்பட்ட மூன்றாவது பெரிய மனித புதைகுழி மன்னாரில் உள்ள திருக்கேதீஸ்வரம் புதைகுழி ஆகும், 2023 இல் அந்த புதைகுழியில் 82 மனித உடல்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

செம்மணி விவகாரத்தின் அடுத்த கட்டம் : நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம்

செம்மணி விவகாரத்தின் அடுத்த கட்டம் : நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானம்

செம்மணி மனித புதைகுழி 

இரண்டாம் கட்ட அகழ்வாய்வின் 18ஆவது நாளான ஜூலை 23 புதன்கிழமை செம்மணி மனித புதைகுழி வளாகத்தில் இருந்து ஐந்து புதிய மனித மண்டை ஓடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன் ஊடங்களுக்குத் தெரிவித்தார்.

பால் போத்தலுடன் குழந்தையின் எச்சம் : மூன்றாவது பெரிய மனித புதைகுழியாக மாறியது செம்மணி | Chemmani Became The Third Largest Mass Grave

"புதிதாக ஐந்து மண்டையோடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று நாட்களும் மொத்தமாக 20 மண்டையோடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. 2 மண்டையோடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. மொத்தமாக 67 மண்டையோடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

நீதிமன்றத்தால் குற்றப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் 85 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, இன்றைய தினம் வரையில் 67 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

மிகப்பெரிய புதைகுழி

இலங்கையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய புதைகுழி மன்னாரில் உள்ள சதொச புதைகுழி ஆகும், அங்கு 28 சிறுவர்களின் எலும்புகள் உட்பட 376 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.

2013 ஆம் ஆண்டில், இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது பெரிய புதைகுழியாகக் கருதப்படும் மாத்தளை வைத்தியசாலைக்கு அருகிலுள்ள ஒரு இடத்திலிருந்து 155 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.

இலங்கையில் நான்காவது பெரிய மனித புதைகுழியாக மன்னாரில் உள்ள திருக்கேதீஸ்வரம் புதைகுழி தற்போது மாறியுள்ளது. அங்கு 82 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.

பால் போத்தலுடன் குழந்தையின் எச்சம் : மூன்றாவது பெரிய மனித புதைகுழியாக மாறியது செம்மணி | Chemmani Became The Third Largest Mass Grave

கொக்குத்தொடுவாய் புதைகுழியிலிருந்து 52 பேரின் எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட பின்னர் அகழ்வாராய்ச்சி பணிகள் நிறைவடைந்தன.

ஒரு வருடத்திற்கு முன்னர், கொழும்பு துறைமுகத்திற்கு செல்லும் புதிய அதிவேக வீதியின் நிர்மாணத்திற்காக நிலம் தோண்டப்பட்டபோது, ஜூலை 13, 2024 அன்று முதல் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

கொழும்பு துறைமுகத்தில் உள்ள பழைய செயலக வளாகத்தில் இருந்து மீட்கப்பட்ட மொத்த மனித எலும்புகளின் எண்ணிக்கை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

இந்தப் மனித புதைகுழிகள் அனைத்தும் தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டவையாகும்

யாழில் இருந்து புறப்பட்ட படகு ஆறு கடற்றொழிலாளர்களுடன் மாயம்

யாழில் இருந்து புறப்பட்ட படகு ஆறு கடற்றொழிலாளர்களுடன் மாயம்

அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவன் மீது சரமாரி தாக்குதல்

அவுஸ்திரேலியாவில் இந்திய மாணவன் மீது சரமாரி தாக்குதல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!   


ReeCha
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021