செம்மணி புதைகுழியில் வெட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள்
செம்மணி புதைகுழிகள், தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை மற்றும் மனித உரிமை மீறல்களின் சான்றாகப் பார்க்கப்படுகின்றன. இதற்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், தமிழ் அரசியல் தலைவர்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் இதற்கு நீதி கோரி வருகின்றனர்.
இந்த அவலம் குறித்து சர்வதேச மனித உரிமை அமைப்புகள் மற்றும் ஐ.நா.வின் கவனத்தைப் பெற்றுள்ளது. எனினும், முழுமையான விசாரணை மற்றும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதில் முன்னேற்றம் மெதுவாகவே உள்ளது.
இந்தக் கொடூரச் சம்பவங்களுக்கு நீதி கிடைப்பது, இலங்கையில் இனங்களுக்கு இடையேயான நல்லிணக்கத்திற்கு முக்கியமானது என ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
இது தொடர்பாக மேலதிக ஆதாரங்களும் வெளிவர வாய்ப்புள்ளது.
இந்நிலையில் செம்மணி அவலங்கள், தொடர்பில் நேரில் இருந்து பார்வையிட்ட, வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்காக முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்த விடயங்கள் சில உண்மைகளை அம்பலப்படுத்துகின்றன.
மேலும், சில எலும்புகள் வெட்டப்பட்ட நிலையிலும், நெறிமுறைகளை பின்பற்றாது புதைக்கப்பட்ட நிலையிலும் காணப்படுவதாக அவர் கூறும் கருத்துக்கள் தொடரும் காணொளியில் விளக்கப்படுகின்றன...
