செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் நிறைவு
யாழ்ப்பாணம் - செம்மணி - அரியாலை சித்துப்பாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்றுடன் (06) நிறைவடைந்துள்ளது.
செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் இதுவரை 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இவ்வாறு அடையாளம் காணப்பட்டவற்றில் 239 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
239 மனித எலும்புக்கூடுகள்
சித்துபாத்தி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் 45வது நாளாக இன்று யாழ்ப்பாண மாவட்ட மேலதிக நீதவான் செல்வநாயகம் லெனின்குமார் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டது.
அகழ்வுப் பணிகள் முதல் கட்டம் 9 நாட்களும் இரண்டாம் கட்டம் 45 நாட்களுமாக மொத்தம் 54 நாட்கள் நடைபெற்ற நிலையில் 240 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்ட நிலையில் 239 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டு சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சித்துப்பாத்தி மனிதப் புதைகுழி வளாகத்தில், மேலும் என்புக் கூடுகள் காணப்படக் கூடும் என நீதிமன்றத்திற்கு ஏற்கனவே அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, அகழ்வுக்காக எட்டு வாரங்கள், கால அவகாசம் தேவைப்படுவதாக தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவா அறிக்கையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |








