நாணய சுழற்சியை வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது ஜி.டி அணி - இன்றைய போட்டியை தனதாக்கி கொள்ளுமா சி.எஸ்.கே
நடப்பு ஐ.பி.எல் 2026 போட்டியின் 37 ஆவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கின்றது.
இன்று பிற்பகல் 3:30 மணிக்கு சென்னையில் உள்ள எம். ஏ சிதம்பரம் மைதானத்தில் ஆரம்பமான போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
சென்னையின் சொந்த மண்ணில் இன்றைய போட்டி நடைபெறுவதால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சற்று கூடுதல் சாதகம் உள்ளது. இருப்பினும், குஜராத் டைட்டன்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சு கூட்டணி சென்னைக்கு சவால் அளிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இரண்டு தோல்வி
இரு அணிகளும் இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில், 3 வெற்றிகள் மற்றும் 4 தோல்விகளுடன் சமமான நிலையில் உள்ளன.

குஜராத் டைட்டன்ஸ் அணி தொடர்ந்து இரண்டு தோல்விகளைச் சந்தித்து, மீண்டு வரும் முனைப்பில் உள்ளது.
மேலும், சென்னையில் கடும் கோடை வெயில் நிலவுவதால், வீரர்களுக்கு இது ஒரு சவாலான ஆட்டமாகவே இன்றைய போட்டி அமைய போகின்றது.
புள்ளிகள் பட்டியலில் இரண்டு அணிகளும் தலா 3 வெற்றிகளுடன் சம நிலையில் இருப்பதால், இன்றைய வெற்றி இரண்டு அணிகளுக்கும் பிளே-ஆஃப் வாய்ப்பிற்கு மிகவும் முக்கியமானதாகும்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
1 வாரம் முன்