கோழி இறைச்சி - முட்டை விலைகள் அதிகரிப்பு
எரிபொருள் விலை உயர்வால், ஒரு முட்டையின் விலை 40 ரூபாயாகவும் தோலுடன் கூடிய ஒரு கிலோ உறைந்த கோழிக்கறியின் விலை 100 ரூபாயிலும் உயர்ந்துள்ளது.
சிறிய முட்டையின் விலை 37 ரூபாயாகவும், நடுத்தர முட்டையின் விலை 39 ரூபாயாகவும் பெரிய (சிவப்பு) முட்டையின் விலை 41 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.
இதன்படி எரிபொருள் விலை உயர்வு மற்றும் எரிவாயு விலை உயர்வு ஆகியவை கோழி வளர்ப்பு நடவடிக்கைகளைக் கடுமையாகப் பாதித்துள்ளன என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் எச். குணசேகர தெரிவித்துள்ளார்.
இறைச்சியின் தேவை
கோழிப் பண்ணைகளில் இளம் கோழிக்குஞ்சுகளைச் சூடுபடுத்த எரிவாயு பயன்படுத்தப்படுகிறது, ஆனால் எரிபொருள் விலை உயர்வு கோழி வளர்ப்புத் தொழிலை வழக்கத்திற்கு மாறாகப் பாதித்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

கோழிப் பண்ணைகளிலிருந்து தோலுடன் கூடிய கோழி இறைச்சி சந்தைக்கு வெளியிடப்படுகிறது.
தற்போது, ஒரு கிலோ கோழிக்கறியின் விலை 1,200 முதல் 1,250 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. தற்போது, தினமும் சுமார் 700 மெட்ரிக் டன் தோலுடன் கூடிய கோழி இறைச்சி சந்தைக்கு வெளியிடப்படுகிறது.
ஒரு மாதத்திற்கான கோழி இறைச்சியின் தேவை 22,000 மெட்ரிக் தொன்கள் ஆகும்.
டீசல் விலை உயர்வால் கடலுக்குச் செல்லும் படகுகளின் எண்ணிக்கை குறைதல், சந்தையில் கிடைக்கும் மீன்களின் அளவு குறைதல், பன்றி இறைச்சி உற்பத்தி குறைதல், ஒரு கிலோ மாட்டிறைச்சியின் விலை 2,800 ரூபாயாக உயர்தல், மற்றும் ஒரு கிலோ ஆட்டு இறைச்சியின் விலை 3,500 ரூபாயை தாண்டுதல் போன்ற காரணங்களால் கோழி இறைச்சிக்கான தேவை அதிகரித்துள்ளது என்று அவர் கூறினார்.
மேலும், தற்போதும் கோழி இறைச்சி இலாபகரமானதாகவே உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழர்களின் பிரச்சினையை 1965இல் ஏற்றுக்கொண்ட டட்லி செல்வா ஒப்பந்தம்… 19 மணி நேரம் முன்