3 மாதங்களுக்குள் 3,000 முறைப்பாடுகள்! நாட்டை அதிரவைத்த மற்றுமொரு தகவல்
sri lanka
people
abuse
CID
By Shalini
பாலியல் குற்றங்கள், ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவது தொடர்பாக மூன்று மாதங்களுக்குள் சுமார் 3,000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சிஐடியின் கணினி குற்றப் பிரிவு தெரிவித்துள்ளது.
15 வயது சிறுமியை இணையத்தின் மூலம் விற்பனை செய்து, துஷ்பிரயோகம் செய்த முறைப்பாட்டில் சுமார் 70 சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், பேஸ்புக் மூலம் இடம்பெறும் துஸ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் சுமார் 900 முறைப்பாடுகளும் பெற்றுள்ளன..
பேஸ்புக் கணக்குகளை ஹேக் செய்வது மற்றும் போலி கணக்குகளை பராமரிப்பது தொடர்பாக சுமார் 700 முறைப்பாடுகளும் பெற்றுள்ளது.
இவற்றில் பணமோசடி தொடர்பான முறைப்பாடுகளும் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.