ஒன்றரை வயது சிறுவன் கால்வாயில் விழுந்து பலி!
Sri Lanka Police
Kilinochchi
Sri Lanka Police Investigation
By Vanan
கிளிநொச்சி மருதநகர் பகுதியில் விவசாயத்துக்கு நீர்ப்பாசனம் மேற்கொள்ளும் கால்வாயில் சிறுவன் ஒருவர் விழுந்து பலியாகியுள்ளார்.
குறித்த பகுதியைச் சேர்ந்த ஒன்றரை வயதுடைய நிசாந்தன் சபீசன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கால்வாயில் விழுந்து சிறுவன் பலி
குறித்த சம்பவம் இன்று (4) மாலை 6 மணியளவில் வீட்டின் அருகில் உள்ள நீர்ப்பாசன கால்வாயில் இடம்பெற்றுள்ளது.
கால்வாயில் விழுந்த சிறுவன், சம்பவ இடத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோ மீட்டர் நீரில் இழுத்துச் சென்ற பின்னர் உயிரிழந்த நிலையில் அயலவர்களினால் மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக கிளிநொச்சி காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.






மரண அறிவித்தல்