தந்தையால் தயாரிக்கப்பட்ட வினாத்தாளால் அரச பரீட்சையில் அகில இலங்கையில் முதலிடம் பெற்ற பிள்ளை
பரீட்சைத் திணைக்களத்தின் இரகசியப் பிரிவில் பணியாற்றிய பிரதி ஆணையாளர் ஒருவரின் பிள்ளையே, சட்டமா அதிபர் திணைக்களத்தால் நடத்தப்பட்ட பரீட்சையொன்றில் முதலிடம் பெற்றுள்ளார் என மாத்தளை மாவட்ட எதிர்க்கட்சி (SJB)நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் அண்மையில் இடம்பெற்ற விவாதத்தில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
இலஞ்ச ஊழல் விசாரணை
“பரீட்சைத் திணைக்களத்தால் நடத்தப்பட்ட பரீட்சையொன்றின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில், பரீட்சைத் திணைக்களத்தின் இரகசியப் பிரிவில் பணியாற்றிய முன்னாள் பிரதி ஆணையாளர் ஒருவரின் பிள்ளை முதலிடம் பெற்றுள்ளார்.

அறநெறிப்படி பார்த்தால், அந்த அதிகாரி முன்னரே தனது பதவியிலிருந்து விலகியிருக்க வேண்டும். ஆனால், அவர் ஜூலை 15 அன்றுதான் பதவியிலிருந்து விலகுகிறார்.
குறித்த பரீட்சை ஒகஸ்ட் 2-ஆம் திகதி நடைபெற்றது. அவர் பதவியிலிருந்து விலகுவதற்கு முன்பாகவே வினாத்தாள்கள் தயாரிக்கப்பட்டுவிட்டன.
அவற்றுக்கு அவர் முழுமையான அணுகலைப் பெற்றிருந்தார். அனைத்துப் பணிகளும் முடிந்த பின்னரே அவர் பதவியிலிருந்து விலகுகிறார். இது குறித்து இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு விசாரணை நடத்த வேண்டும்.
மேலும், அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டும், பின்னர் அவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். இதுவும் பொது நிதியைத் தவறாகப் பயன்படுத்துவதற்கே சமமாகும். இந்த விவகாரங்கள் குறித்து இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு கவனம் செலுத்த வேண்டும்.” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |