கடும் உணவுப்பற்றாக்குறை : பாகிஸ்தானில் பேராபத்தில் குழந்தைகள்
பாகிஸ்தானின்(pakistan) பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள குழந்தைகளில் அரைவாசி பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் சமீபத்தில் அந்நாட்டில் நடத்திய ஊட்டச்சத்து ஆய்வில் தெரிவித்துள்ளன.
கடுமையான உணவுப் பற்றாக்குறையால், நோய் எதிர்ப்புச் சக்தியை பலவீனப்படுத்தியதால், இப்பகுதியில் 49.6% குழந்தைகள் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
இயற்கை அனர்த்தங்களும் காரணம்
கடந்த சில வருடங்களில் ஏற்பட்ட வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை அனர்த்தங்களும் அதற்குக் காரணமாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிறப்பு கவனிப்பு மற்றும் கண்காணிப்பு அவசியம்
பெரும்பாலான குழந்தைகள் ஏற்கனவே தட்டம்மை போன்ற கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களின் உடல் வளர்ச்சி மற்றும் சரியான எடையை பராமரிக்க சிறப்பு கவனிப்பு மற்றும் கண்காணிப்பு அவசியம் என்றும் மாநில சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பலுசிஸ்தான் மாநிலத்தில் போதிய நிதி இல்லாத காரணத்தால், ஊட்டச்சத்து குறைபாட்டிற்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தவறிவிட்டனர் என்றும், இதற்கான நடவடிக்கையை மத்திய அரசு உடனடியாக எடுக்குமாறு பலூசிஸ்தான் மாநில அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |