அனர்த்தத்தில் பெற்றோரை இழந்த சிறுவர்கள் : அரசின் அதிரடி அறிவிப்பு
நாட்டில் ஏற்பட்ட பேரிடரால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த சிறுவர்கள் தொடர்பில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, பெற்றோரை இழந்த குறித்த சிறுவர்கள் சமூக, நலன்புரி நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்பு சேவை திணைக்களத்தின் கீழ் பாதுகாக்கப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் பணிப்பாளர் ஷானிக்கா மலல்கொட இந்த விடயத்தினை குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை
அதிதீவிர வானிலையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்ட சிறுவர்களின் எண்ணிக்கை தொடர்பான தரவுகளைச் சேகரிக்கும் பணி மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சிடம் ஒப்படைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை டித்வா சூறாவளி ஏற்படுத்திய பேரழிவுகளால் இலங்கையில் 275,000க்கும் அதிகமான சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சிறுவர் நிதியம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |