உலகின் வறண்ட நாட்டில் ஒருவருடத்தில் கிடைக்கவேண்டிய மழை 03 மணிநேரத்தில் கொட்டித்தீர்த்தது
Climate Change
World
Flood
Landslide
By Jaso
உலகின் வறண்ட நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் சிலி, லத்தீன் அமெரிக்காவில் ஏற்பட்ட திடீர் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு வருடத்தில் பெய்யும் மழையளவு முழுவதையும் இரண்டு அல்லது மூன்று மணி நேரத்தில் நாடு பெற்றுவிட்டதாக சிலி வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்
இந்த திடீர் கனமழையால் பல மாகாணங்களில் நிலச்சரிவுகளும் வெள்ளமும் ஏற்பட்டுள்ளன. கனமழை மற்றும் வெள்ளத்தால் 25,000-க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
ஆண்டுக்கு 5 மில்லிமீட்டர் மழை
வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட முக்கிய நகரம் டோகோபில்லா ஆகும். இந்த நகரம் ஆண்டுக்கு 5 மில்லிமீட்டர் மழைப்பொழிவைப் பெறுகிறது.

இருப்பினும், நேற்று (19) சில மணி நேரத்தில் இந்த நகரம் 30 மில்லிமீட்டர் மழைப்பொழிவைப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்