விண்வெளியிலும் சாதனை படைக்கும் சீனா
china
space
phoptos
By Sumithiran
சிவப்பு கிரகம் என அழைக்கப்படும் செவ்வாயில் ஜூராங் (Zhurong) ரோவர் எடுத்த புகைப்படங்களை சீனா வெளியிட்டுள்ளது.
செவ்வாய் கிரகம் குறித்த ஆராய்ச்சிக்காக சீனா கடந்த ஆண்டு லாங் மார்ச்-5 என்ற ரொக்கெட் மூலம் தியான்வென் விண்கலத்தை விண்ணில் செலுத்தியது.
இந்த விண்கலம் கடந்த மாதம் 22 ஆம் திகதி செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியது. அதிலிருந்த ஜூராங் என்ற ரோவர் தற்போது ஆய்வுகளை மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில் அந்த ரோவர், தான் தரையிறங்கிய தளம், செவ்வாயிலுள்ள மண் உள்ளிட்ட 3 புகைப்படங்களை அனுப்பியுள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்