“கொரோனா என்பதெல்லாம் பொய்” சர்ச்சையை கிளப்பிய உலகின் முதல் நோயாளி
உலகின் முதலாவது கொரோனா நோயாளி மர்மமான முறையில் மாயமாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சீனாவின் வுஹான் நகரில் ரகசிய ஆய்வகம் ஒன்றில் அறிவியலாளராக பணியாற்றிய ஹுவாங் யான்லிங் என்ற பெண்ணே உலகின் முதல் கொரோனா நோயாளியாக கருதப்படுகிறார்.
சீனா அதிகாரபூர்வமாக கொரோனாவை ஒப்புக்கொள்வதற்கு சில மாதங்கள் முன்பே யான்லிங்கிற்கு கொரோனா தொற்றியிருக்கலாம் என கருதப்படுகிறது.
யான்லிங்கிற்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை மறுத்துள்ள வுஹான் வைரஸ் ஆய்வு நிறுவனம், அவர் அந்நிறுவனத்தில் படித்து முடித்ததுமே வேறிடத்தில் வாழவும் வேலை செய்யவும் சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து “வீசாட்” தளத்தில் தோன்றிய யான்லிங் , தான் உயிருடன் இருப்பதாகவும், தனக்கு கொரோனா என்பதெல்லாம் பொய் என்றும் தெரிவித்திருந்தார்.
ஆனால், அதற்குப் பின் யான்லிங் மாயமாகிவிட்டார்.
அவர் சீனாவால் மறைக்கப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறன்றது.
ஆனால், அத்தகவல் உண்மையில்லை, அமெரிக்கா இவ்வாறு பொய்களை பரப்பி விட்டுள்ளது என சீனா குற்றம் சாட்டியுள்ளது.