மூன்று நாட்களில் உயிரை பறிக்கும் வைரஸ் : சீனாவின் அதிர்ச்சிகர கண்டுப்பிடிப்பு
சீனாவில் (China) மூன்று நாட்களில் உயிரைப்பறிக்க கூடிய புதிய வகை வைரஸ் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் ஹெபெய் மருத்துவ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் எபோலாவின் சில பகுதிகளை பயன்படுத்தி ஒரு புதிய வைரஸை உருவாக்கியுள்ளனர்.
இந்த நிலையில், குறித்த மரபணு மாற்றப்பட்ட வைரஸ் மூன்று நாட்களில் உயிரைப் பறிக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உறுப்பு செயலிழப்பு
இதனடிப்படையில், சீனா உருவாகியுள்ள இந்த புதிய மரபணு மாற்றப்பட்ட வைரஸ் அச்சுறுத்தலாக அமையலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
சீன ஆராய்ச்சியாளர்கள் எபோலா வைரஸில் உள்ள கிளைகோபுரோட்டீனை இந்த வைரஸில் பயன்படுத்தியுள்ள நிலையில் இது செல்களைப் பாதித்து மனித உடல் முழுவதும் விரைந்து பரவுவதுடன் எபோலா பாதித்தவர்களிடம் காணப்படுவதைப் போன்ற உறுப்பு செயலிழப்பும் ஏற்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
பாதிப்பு அறிகுறி
அத்தோடு, வைரஸ் செலுத்தப்பட்டு ஆய்வில் பயன்படுத்திய சில வெள்ளெலிகளின் கண் இமைகளின் மேற்பரப்பில் சிரங்குகள் ஏற்பட்டு இறுதியில் அவற்றின் கண்பார்வை பறிபோயியுள்ளன.
கட்டுப்படுத்தப்பட்ட ஆய்வக சூழலில் எபோலா வைரஸின் பாதிப்பு அறிகுறி குறித்து ஆய்வு செய்வதே இதன் நோக்கம் என தெரிவித்த சீன விஞ்ஞானிகள் இந்த வைரஸ் வெளியே பரவாமல் இருக்க தடுப்பு உத்திகளை மேற்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், அதேவேளை சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸால் உலகம் பல கோடி மக்கள் உயிரிழந்த நிலையில், மீண்டுமொரு வைரஸை உருவாக்கியுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |