அத்துமீறும் சீன இராணுவம்...! தாய்வானிற்கு படையெடுத்த போர் விமானங்கள்
தாய்வானின் (Taiwan) வான்பரப்பிற்குள் சீனாவின் (china) 12 இராணுவ விமானங்கள் அத்துமீறப் பிரவேசித்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சீன விமானங்கள் மற்றும் உத்தியோகபூர்வ கப்பல் இன்று (22.7.2024) காலை 6 மணியளவில் தென் மேற்கு மற்றும் தென் கிழக்கு வான் பாதுகாப்பு அடையாள பிராந்தியத்திற்குள் பிரவேசித்ததாக தாய்வான் தேசிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் எக்ஸ் தளத்தில் தாய்வான் தேசிய பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில்,
சீன இராணுவ விமானங்கள்
கடந்த வாரம் சீனாவின் நான்கு கரையோர காவல் படைக் கப்பல்கள் தாய்வானின் கட்டுப்பாட்டிலுள்ள கின்மென் கவுண்டி பகுதியில் பிரவேசித்தது.
12 PLA aircraft, 7 PLAN vessels and 1 official ship operating around Taiwan were detected up until 6 a.m. (UTC+8) today. 5 of the aircraft crossed the median line and entered Taiwan's southwestern ADIZ. We have monitored the situation and responded accordingly. pic.twitter.com/aOoQVp1o6n
— 國防部 Ministry of National Defense, R.O.C. ?? (@MoNDefense) July 22, 2024
இது ஜுலை மாதத்தில் இடம்பெற்ற முதலாவது அத்துமீறலாகும்.
தற்போது 16 சீன இராணுவ விமானங்கள் தாய்வானுக்கு அருகில் அவதானிக்கப்பட்ட போதிலும் அவற்றில் 14 விமானங்கள் எமது வான் பரப்புக்குள் பிரவேசித்தன.
அத்தோடு 09 சீன கடற்படைக் கப்பல்களும் தாய்வான் எல்லைக்கு அருகில் காணப்பட்டன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |