சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெறுவதில் மேலும் சிக்கல் - ஒத்துழைக்குமா சீனா!
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 2.9 பில்லியன் டொலர்களை சிறிலங்கா பெறுவதற்கு, சீனா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கடன் மறுசீரமைப்பு வேலைத்திட்டம், சவாலாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் தொடர்பில் ஜப்பான் அரசாங்க அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அதற்கமைய சீனாவின் பங்களிப்பு இல்லாமல் நாட்டின் கடன் மறுசீரமைப்பு செயல்முறை கடினமாக இருக்கும் என்றும் ஜப்பானிய அரசாங்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் அந்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின் கடன் தொகை தொடர்பான அறிக்கை
அந்த ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள செய்தியின்படி, உலக நிதி மேலாளர்களால் நாட்டில் உள்ள சர்வதேச பத்திரங்களின் அளவு 20 பில்லியன் டொலர்களுக்கு அருகில் உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி நாட்டில் வெளிநாட்டுக் கடன் தொகை 85 முதல் 100 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை இருக்கலாம் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)