மின்சார தடையின் பின்னணி.!நாளை வெளியாகவிருக்கும் முக்கிய அறிவிப்பு
நாடு முழுவதும் இன்று (09) ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பான விரிவான தகவல்களை இலங்கை மின்சார சபை நாளை (10) வெளியிடும் என்று அதன் தவிசாளர் திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து மின்சார சபையின் உள்ளக குழு விசாரணை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, மின்சார தடை தொடர்பான விரிவான விசாரணையை மின்சக்தி அமைச்சும் மேற்கொண்டு வருவதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் உதயங்க ஹேமபால கூறியுள்ளர்.
மீண்டும் இது போன்ற நிலைமை
இது போன்ற நிலைமை மீண்டும் ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை பரிந்துரைக்க தொடர்புடைய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இறுதியாக 2023 டிசம்பர் 9 ஆம் திகதி நாடு முழுவதும் மின்சார தடை ஏற்பட்டிருந்த நிலையில், இன்றையதினம் அதேபோன்ற சம்பவமொன்று இடம்பெற்றிருந்தது.
இவ்வாறனாதொரு பின்னணியில், இன்று ஏற்பட்ட மின்சார தடைக்கு கொத்மலையிலிருந்து பியகம வரையிலான மின்சார விநியோகக் கம்பியில் ஏற்பட்ட கோளாறுதான் காரணம் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாளை மீண்டும் இது தொடர்பான விரிவான விளக்கம் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)