இலங்கையில் திடீர் மின்தடை : திக்குமுக்காடும் அநுர அரசு
நாடளாவிய ரீதியில் சற்று முன்னர் தீடிரென மின்சாரம் தடைப்பட்டிருந்தது.
பாணந்துறை மின் இணைப்பு துணை மின் நிலையத்தில் குரங்கு ஒன்று மோதியதால் மின் தடை ஏற்பட்டதாக எரிசக்தி அமைச்சர் பொறியாளர் குமார ஜெயக்கொடி தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், தற்போது மின்சாரத் தடை சில பகுதிகளில் வழமைக்கு திரும்பியுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
திடீர் மின்சார தடையின் நிமித்தம் வைத்தியசாலைகள், தொழில் நிலையங்கள் மற்றும் அவசர சேவைகள் என்பன தடைபெற்று மக்கள் பலதரப்பட்ட சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
முன்னறிவிப்பின்றி இவ்வாறு மின்சார தடை விதிக்கப்பட்டமை குறித்து சமூக வலைதளங்களில் பலதரப்பட்ட கருத்துகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில், இந்த நிலை மேலும் சில நாட்கள் நீடிக்கப்பட்டிருந்தால் என்னவாகும் என்பது குறித்தும் மக்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
இந்தநிலையில், இது தொடர்பில் மேலதிக கருத்துக்களை விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)