இலங்கை விவகாரத்தில் சீனா கைவிரிப்பு
Dr Harsha De Silva
Sri Lanka Economic Crisis
Samagi Jana Balawegaya
China
By Vanan
இலங்கையினால் பெறப்பட்ட கடன்களை மறுசீரமைக்க சீனா மறுத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கூறியுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று இதனைத் தெரிவித்த அவர், வெளிநாட்டுக் கையிருப்பை அதிகரிப்பதற்கான வழிகளை கண்டுபிடிக்கத் தவறினால் நாடு மேலும் நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் எனக் கூறினார்.
மூன்று பில்லியன் அமெரிக்க டொலர் கடனைக் கோரி ஜப்பானிய பிரதமருக்கு அரச தலைவர் கடிதம் எழுதியுள்ளதாகவும், அவர் சாதகமான பதிலைக் காட்டியுள்ளதாகவும் அறிந்தோம்.
அதுதான் தற்போது எமக்குள்ள ஒரே நம்பிக்கை. அந்தக் கடனைப் பெற்றுக்கொள்ளத் தவறினால், நாங்கள் கடுமையான சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்," என்று அவர் கூறினார்.

மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி