அமெரிக்காவுக்கு சீனா தக்க பதிலடி
china
us
taiwan
By Jaso
தாய்வான் தன்னுடன் இணைவதைத் தவிர சுதந்திர நாடாக உருவாவதற்கான எதிர்காலம் அதற்கு இல்லை என்று சீனா தெரிவித்துள்ளது.
தாய்வான் சீனாவின் ஒரு பகுதியாக இருப்பதைத் தவிர சர்வதேச சட்ட அங்கீகாரத்தைப் பெற வாய்ப்பில்லை என்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி குறிப்பிட்டார்.
தாய்வானுக்கு ஐக்கிய நாடுகள் சபையில் தனி அங்கீகாரம் வழங்கப்படும் என அமெரிக்கா வெளியிட்ட அறிக்கைக்கு பதிலளிக்கும் வகையில் சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்கா உட்பட சில நாடுகள், சீனாவின் கொள்கையை மாற்ற முயன்றன, ஆனால் அது தோல்வியடைந்தது, எனவும் அவர் தெரிவித்தார்.