ட்ரம்பிற்கு சீனா பதிலடி : அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கப்பட்டது உயர்ந்த பட்ச வரி
அமெரிக்காவிலிருந்து(us) இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் சீனாவின்(china) நிதி அமைச்சு 84% வரியை அறிவித்துள்ளது.
இந்தப் புதிய கட்டணங்கள் ஏப்ரல் 10 ஆம் திகதி மதியம் முதல் நடைமுறைக்கு வரும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
டொனால்ட் ட்ரம்ப்(donald trump) சீனப் பொருட்கள் மீதான அமெரிக்க வரியை 104% ஆக உயர்த்துவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றினால், உறுதியான எதிர் நடவடிக்கைகள் இருக்கும் என்று பெய்ஜிங் தெரிவித்திருந்தது.
ட்ரம்பிற்கு சீனா பதிலடி
எனினும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை ட்ரம்ப் அதிகரித்த நிலையிலேயே சீனாவும் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சீனாவின் இந்த வரி விதிப்பானது அமெரிக்க நிறுவனங்களுக்கு பலத்த அடியாகும். மேலும் - சந்தேகத்திற்கு இடமின்றி சந்தைகளில், குறிப்பாக அமெரிக்காவில், மேலும் அதிர்ச்சி அலைகளை அனுப்பப் போகிறது என ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் ஆறு நிறுவனங்கள் தொடர்பில் சீனாவின் அறிவிப்பு
இதேவேளை சீனா தனது "நம்பகமற்ற நிறுவனம்" பட்டியலில் மேலும் ஆறு அமெரிக்க வணிக நிறுவனங்களை சேர்த்துள்ளதாக அதன் வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதில் விண்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனமான சியரா நெவாடா கோப்பரேஷன் மற்றும் AI நிறுவனங்களும் அடங்கும்.
டொனால்ட் ட்ரம்பின் சீன இறக்குமதிகள் மீதான 104% வரிகள் இன்று(09) நடைமுறைக்கு வந்த பிறகு, சீன நிதி அமைச்சகம் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 84% வரிகளை அறிவித்த பின்னர் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
முன்னர் நம்பகமற்ற பட்டியலில் சேர்க்கப்பட்ட அமெரிக்க நிறுவனம்
சீனா முன்பு கால்வின் க்ளீன் மற்றும் டாமி ஹில்ஃபிகர் ஆகிய வடிவமைப்பாளர் தயாரிப்புகளை வைத்திருக்கும் நிறுவனமான PVH-ஐ நம்பகமற்ற பட்டியலில் சேர்த்தது.
"நம்பகமற்ற நிறுவனங்களின் பட்டியல்" என்று அழைக்கப்படுவது சீனாவில் வணிகம் செய்வதை கடினமாக்குகிறது, ஏனெனில் இதில் உள்ள நிறுவனங்கள் தடைகள் மற்றும் அபராதங்களை எதிர்கொள்ளக்கூடும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
