அமெரிக்காவுக்கு சீனா தகுந்த பதிலடி -நான்கு அதிகாரிகளுக்கு விதிக்கப்பட்டது தடை
china
band
u s
By Sumithiran
அமெரிக்காவின் இறக்குமதி தடை உத்தரவுக்கு பதிலடியாக, அந்நாட்டை சேர்ந்த 4 அதிகாரிகளுக்கு சீனா தடை விதித்துள்ளது.
சீனாவில் உய்கர் மக்களை கட்டாயப் பணி செய்யவைத்து தயாரிக்கப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்ய சமீபத்தில் அமெரிக்கா தடை விதித்தது. மேலும், பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டியை ராஜாங்க ரீதியில் புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்க அரசின் சர்வதேச மத விவகாரங்களுக்கான ஆணையத்தின் தலைவர் நதின் மென்சா, துணை தலைவர் நூரி டுர்கெல், உறுப்பினர்கள் அனுரிமா பார்கவா, ஜேம்ஸ் கார் ஆகிய 4 அதிகாரிகள் சீனாவுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், சீனாவில் அவர்களின் சொத்துக்கள் முடக்கப்படும் என்றும், வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஜோ லிஜியன் தெரிவித்துள்ளார்.
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
11ம் ஆண்டு நினைவஞ்சலி