ஹம்பாந்தோட்டை சீன உக்தியில் பாரிய பங்கு வகிக்கும் பாகிஸ்தான்! - இந்தியாவிற்கு புதிய சிக்கல்
இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கும் பாக்கிஸ்தான் இராணுவத்திற்கும் அதிக தொடர்பு காணப்படுகிறது.
மேலும் அம்பாந்தோட்டை சீன உக்தியில் பாகிஸ்தானுக்கும் பாரிய பங்கு உண்டு என எழுத்தாளர், நடிகர் ஜெயபாலன் தெரிவித்துள்ளார்.
ஐபிசி தமிழ் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
சீனாவை கட்டுப்படுத்த முடியுமா
சீனா தனது இரண்டாவது கூட்டாளியாக ரஷ்யாவை கொண்டுள்ளது போல், இந்தியாவை தனது 2வது கூட்டாளியாக மாற்ற அமெரிக்கா முயற்சிக்கிறது.
அமெரிக்காவுடன் சேராமல் இந்தியாவால் சீனாவை கட்டுப்படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சீனா தான் நினைத்ததை செய்யும் நாடாக தான் இருக்கிறது.
குறிப்பாக, சர்வதேச சட்டங்களை பெரிதாக சீனா பொருட்படுத்துவதில்லை. இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கும் பாக்கிஸ்தான் இராணுவத்திற்கும் அதிக தொடர்பு காணப்படுகிறது.
ஹம்பாந்தோட்டை சீன உக்தியில் பாகிஸ்தானுக்கும் பாரிய பங்கு உண்டு.
குறிப்பாக இந்தியாவைப் பொறுத்தவரை இலங்கை தமிழர்களுடனான நேர்மையான உறவை ஏற்படுத்தினால், எல்லோரையும் விட கேந்திர முக்கியத்துவமான இடங்கள், மக்கள், அமைப்புகள் பெரிய பலத்தை ஏற்படுத்தும்" என தெரிவித்தார்.
மேலும் இலங்கையின் தேவேந்திர முனைக்கு, சீனா ஒரு ரேடார் தளத்தை ஆரம்பிக்கப் போகிறது என வெளியான செய்தி குறித்து ஜெயபாலன் விளக்கம் அளித்துள்ளார்.
