வெளிநாடுகளில் சீனாவின் மோசமான செயல்!
இலஞ்சம், மோசடிகள் மூலம் ஆட்சியாளர்கள் மற்றும் தொழில்சார் நிபுணர்களை வளைத்துப் போட்டு, வேறு நாடுகளை சுரண்டுவது சீனாவின் நடைமுறை என பேராசிரியர் நெதலகமுவே தம்மதின்ன தேரர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர், நாட்டின் தலைவரை பணம் கொடுத்து வாங்குவது சீனாவின் நடைமுறை. அப்போது அவருக்கு கீழே இருக்கும் நபர்கள் தானாகவே சீனாவின் பக்கம் சென்று விடுவார்கள். இதுதான் சீனாவின் நடைமுறை.
உங்களுக்கு ஏதாவது வேலை ஒன்றை செய்ய வேண்டுமாயின் இலஞ்சம் கொடுத்து, செய்துக்கொள்ள முடியும். இப்படித் தான் நடைமுறைகள் இருக்கின்றன.
இது மிகவும் அநாகரீகமான, மோசமான சட்டவிரோதமான முறை. நாட்டிற்குள் அல்லது வெளிநாடுகளில் தரகு பணம் கொடுக்கப்பட மாட்டாது என அமெரிக்காவின் அரசியலமைப்புச் சட்டத்தில் உள்ளது. சீனாவிடம் 15 வீதம் தரகு பணத்தை கோரினால், அந்தத் தொகை அப்படியே வழங்கப்படும்.
அப்படியென்றால், சீனாவின் நடவடிக்கைகளை எண்ணிப்பாருங்கள் என பேராசிரியர் நெதலகமுவே தம்மதின்ன தேரர் குறிப்பிட்டுள்ளார்.