தாய்வான் துணை அதிபரின் அமெரிக்க விஜயத்தினால் கடுங்கோபத்தில் சீனா!
தாய்வானின் நட்பு நாடான தென்னமெரிக்காவின் பராகுவேயிற்கு விஜயம் மேற்கொள்ள தீர்மானித்த தாய்வானின் துணை அதிபர் வில்லியம் லாய் பராகுவே செல்லும் வழியில் நேற்றிரவு (13) இடைநிறுத்தமாக அமெரிக்காவின் சென்பிராஸ்சிஸ்கோ நகரை சென்றடைந்தார்.
அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு இருந்து வரும் நிலையில், தாய்வான் துணை அதிபர் அமெரிக்கா சென்றுள்ளது, சீனாவுக்கு எரிச்சலூட்டியுள்ளததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு பிரிவினைவாதி

இது தொடர்பாக சீனா தரப்பில் கூறும்போது ''தாய்வான் துணை அதிபர் வில்லியம்ஸ் லாய் ஒரு பிரிவினைவாதி, அவர் தொடர்ந்து இடையூறு செய்து வருகிறார். சீனா தனது இறையாண்மையை பாதுகாக்க கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்வான் தனி நாடு என்றாலும், தங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பிராந்தியமாக சீனா பார்க்கிறது.
ஆனால், அமெரிக்க உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் தாய்வானுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.
இராணுவ உதவி

இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
அடிக்கடி தாய்வானை ஒட்டிய கடற்பகுதியில் இராணுவ நடவடிக்கைகளை அதிகரித்து மிரட்டல் விடுத்து வருவதை சீனா வழக்கமாக வைத்துள்ளது.
இதையும் தாண்டி தாய்வானுக்கு சமீபத்தில் அமெரிக்கா இராணுவ உதவி வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.