மத்திய கிழக்கில் தொடரும் உச்சக்கட்ட கொதிநிலை - போரில் நுழையும் சீனா
ஈரான் (Iran) மீதான போரில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும் தமது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்துமாறு சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் வலியுறுத்தியுள்ளார்.
இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் மாவோ நிங் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்களில் ஈரானை மிகக் கடுமையாகத் தாக்குவோம் என்று அச்சுறுத்தி உள்ள நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இராணுவ நடவடிக்கை
இராணுவ வழிமுறைகளால் ஒரு பிரச்சனைக்கு தீர்வை காண முடியாது. மோதல்கள் தீவிரமடைவது இரு தரப்புக்கும் நலன் பயக்காது.

image - kyivpost
சம்பந்தப்பட்ட தரப்பினர் உடனடியாக இராணுவ நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகப் பொருளாதாரம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பில் மேலும் கடுமையான பாதிப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்க அனைத்துத் தரப்பினரும் முயற்சிக்க வேண்டும் என்றும் செய்தித் தொடர்பாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 3 நாட்கள் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
6 நாட்கள் முன்