ஆப்கானின் எதிர்காலம் தொடர்பில் சீனா வெளியிட்ட அறிவிப்பு
people
china
afghanistan
By Sumithiran
ஆப்கானிஸ்தானில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காண ஐ.நா,.மூலம் ஜி20 நாடுகள் நடவடிக்கை எடுக்கும் என இத்தாலி பிரதமர் மரியோ திராகி தெரிவித்துள்ளார்.
ஆப்கான் குறித்து விவாதிக்க வீடியோ மூலம் ஜி20 நாடுகளின் அவசர மாநாடு இத்தாலி தலைமையில் நடத்தப்பட்டது.
அப்போது சீனா சார்பில் கலந்து கொண்ட அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் Wang Yi, ஒருவரது சித்தாந்தங்களை மற்றவர் மீது திணிப்பது, பிற நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவது, இராணுவம் மூலம் தலையிடுவது ஆகியவை நெருக்கடியை மேன்மேலும் கூட்டும் எனவும், ஆப்கானின் எதிர்காலத்தை அந்நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டுமெனவும் கூறினார்.